கதறியபடியே கலெக்டர் ஆபிஸ் வந்த பெண்கள்! நெஞ்சை உலுக்கி எடுக்கும் காரணம்!

புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க மீனவ சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சம்பவமானது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதாளை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசித்துவந்த 4 பேர் ஓமன் நாட்டில் கூலி தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவர்கள் அன்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதியன்று, ஒப்பந்தம் செய்யப்பட்ட 4 பேர் உட்பட 8 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட புயலில் சிக்கி 4 பேரும் மாயமாகினர். தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஓமன் மீட்புப்படையினர், 2 பிணங்களை அழுகிய நிலையில் கண்டுபிடித்தனர்.

ஓமன் அரசு அதிகாரிகள் டிஎன்ஏ சோதனையில் ஈடுபட்ட போது சடலங்களாக மீட்கப்பட்ட 2 பேரும் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் கார்மேகம் என்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்த நம்புதாளை கிராமத்தினர் இன்று ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்துபோன 2 பேரின் உடலை மீட்டுத்தரவும், ஓமன் நாட்டு அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற்று தரவும் கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர்.  இந்த சம்பவமானது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.