கொரோனா சிகிச்சைக்கு சென்ற 2 பெண் டாக்டர்களை விரட்டி விரட்டி அடித்த மக்கள்! அதிர்ச்சி சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

கொரோனா சிகிச்சைக்கு மும்பை: கொரோனா ஆய்வுக்குச் சென்ற மருத்துவக் குழு மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்ற 2 பெண் டாக்டர்களை விரட்டி விரட்டி அடித்த மக்கள்! அதிர்ச்சி சம்பவம்! பதற வைக்கும் காரணம்!


மகாராஷ்டிரா மாநிலம், இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதையொட்டி, அதன் சுற்றுப்புறங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள தாட் பட்டி பக்கல் பகுதியில் மருத்துவக் குழு ஒன்று நேரில் சென்று, அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கொரோனா தொற்று உள்ளதா என்றறிய பரிசோதனை நடத்த முயன்றனர்.

ஆனால், திடீரென அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மருத்துவக் குழுவினர் மீது கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில், 2 பெண் மருத்துவர்கள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். இருந்தாலும், உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் மருத்துவக் குழு துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் உயிரை காப்பாற்ற பாடுபடும் மருத்துவக் குழுவினரை இப்படி கல்வீசி தாக்கிய கொடூர சம்பவத்தால், மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெரும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.