சேலம் மாவட்டத்தில் சாலையில் நடந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் நகையுடன் பெண்ணயும் இழுத்து சென்றது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
செயின் திருடனிடம் இருந்து தாலியை காப்பாற்ற போராடிய பெண்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

சேலம் மாவட்டம், கவுண்டம் பட்டியில் வசித்து வரும் பெண் உண்ணாமலை, இவர் வழக்கமாக அந்த பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் நடைபயிற்சி செய்து வந்தார்.
இதனை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் நேற்று அவர் வழக்கம் போல நடந்து வர, திட்டகிட்டபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், உண்ணாமலையின் கழுத்தில் இருந்த, 8 சவரன் மதிப்பில் தாலி சங்கிலியை அறுக்க முயன்ற போது அவரையும் சேர்த்து, கீழே இழுத்து தள்ளிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான சி சி டி வி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.