சகோதரிகளை அழைத்து வர அதிவேகம்..! இளைஞர்கள் இருவருக்கும் நேர்ந்த பரிதாப முடிவு! கோவை சோகம்!

மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் சம்பவமானது கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


கேரள மாநிலத்தில் உள்ள பாலகாட்டு அருகேயுள்ள நல்லேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். அவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பரான அர்ஜுன்ராஜ் அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் விஷ்ணுவிற்கு  சபிதா என்ற 24 வயது பெண்ணும், சுனிதா என்ற 22 வயது பெண்ணுமென 2 சகோதரிகள் உள்ளனர். இருவருக்கும் இன்று கல்லூரியில் தேர்விருந்துள்ளது. பலத்த மழையால் அப்பகுதியில் போக்குவரத்தில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விஷ்ணு மற்றும் அர்ஜுன் ராஜு பாதுகாப்பிற்காக இருவரும் அழைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலளந்தாவளம் பகுதிக்கருகேயுள்ள கே.ஜி.சாவடியில் சென்றுகொண்டிருந்தபோது இருவரது மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டுள்ளன. மோதிய அதிர்ச்சியில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 4 பேரையும் சேர்த்தனர்.

இந்நிலையில் விஷ்ணு மற்றும் அர்ஜுன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.