கல்லூரி சென்று வந்த மாணவி தீக்குளித்த பயங்கரம்! அதிர வைத்த காரணம்!

கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடன் சக மாணவிகள் சகஜமாக பேசவில்லை என்று துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி அருகே பைதந்துறை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை மணமுடித்தார். இத்தம்பதியினருக்கு ஸ்வேதா, சபிதா என்று 2 மகள்கள் உள்ளனர்.

ஸ்வேதா பன்னிரண்டாம் வகுப்பு 501/600 என்ற மதிப்பெண் எடுத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதியார் மகளிர் கலைக் கல்லூரியில் கணித பாட பிரிவை தேர்வு செய்தார்.

முதல் நாள் கல்லூரிக்கு நேற்று சென்ற ஸ்வேதா மாலையில் வீடு திரும்பியபோது மிகவும் சோகமாக காணப்பட்டார். அம்மா மற்றும் தங்கை விசாரித்ததில் தன்னுடன் சக மாணவிகள் சகஜமாகப் பேசவில்லை என்று வருந்தியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல எல்லாம் நன்றாக ஆகிவிடும் என்று கூறி ஸ்வேதாவை அவர்கள் தேற்றினர்.

இன்று அதிகாலை கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போன்று பணிக்கு சென்று விட்டார். தாய் மற்றும் தங்கை இருவரும் வெளியே சென்ற நேரத்தில் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு ஸ்வேதா தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அருகில் இருந்தோர் பதறியடித்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஸ்வேதா உடல் கருகி இறந்து போனார்.

இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். காவல் துறையினர் சக மாணவிகள் பேசவில்லை என்று தான் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.