பாபர் மசூதியை இடிக்க முதலில் டூம் மேல் ஏறிய கரசேவகர் தற்போது 90 மசூதிகளை கட்டி இஸ்லாமியர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
1992ல் பாபர் மசூதி மீது ஏறி முதல் ஆளாக இடித்த இளைஞன்..! 2019ல் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்!
1992- ம் ஆண்டு டிசம்பர் 6- ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது. மசூதியை உடைக்க ஏராளனமா கரசேவகர்கள் அயோத்திக்கு வந்திருந்தனர். அதில், பானிபட் நகரை சேர்ந்த பல்பீர் சிங் என்பவரும் ஒருவர். சிவசேனா தலைவர் பால்தாக்கரே, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சித்தாந்தங்கள் ஈர்க்கப்பட்டவர் பல்பீர் சிங்.
பல்பீர் சிங்கின் மனத்தில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்கள் கூடியபோது, மசூதியின் டூமை குறிவைத்து பல்பீர் சிங் முதலில் மேலே ஏறினார்.
மசூதியின் கோபுரத்தை உடைத்த பின் சொந்த ஊருக்கு திரும்பிய பல்பீர் சிங்குக்குப் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மதச்சார்பின்மையில் நம்பிக்கைகொண்டிருந்த பல்பீர் சிங்கின் தந்தை, அவரை கடுமையாகக் கண்டித்தார். 20 வயது பல்பீர் சிங்குக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை.
பிற்காலத்தில் தன் தவற்றை உணர்ந்த பல்பீர் சிங், இஸ்லாம் மதத்திற்கு மாறி தன் பெயரை முகமது அமீர் என மாற்றிக்கொண்டார். இஸ்லாமியப் பெண்ணை மணந்துகொண்ட அமீருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சிலரால் தூண்டப்பட்டு சட்டத்தைக் கையில் எடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டதை உணர்ந்த பல்பீர்சீங் இஸ்லாம் மதத்தை தழுவி இதுவரை 90 மசூதிகளை கட்டியுள்ளார். இஸ்லாமிய கூட்டங்களில் உரையாற்றி, மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் முகமது அமீர்.