19 வயது கர்ப்பிணி காதலி கற்பழிப்பு! 2 மாத கரு கலைந்த கொடூரம்! அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது கர்ப்பிணியை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பன்ஸ்வாரா மாவட்டத்தில் 19 வயதே ஆன பட்டியலின பெண் ஒருவருடன் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காதலித்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். கர்ப்பம் தரித்து 2 மாதம் ஆன நிலையில் கடந்த ஜுலை மாதம் 13ம் தேதி அந்தப் பெண்ணை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தார் அந்த இளைஞர்.

அப்போது வழிமறித்த சில கயவர்களை காதலனை இரும்புக் கம்பி, அரிவாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் 19 வயதான அந்த கர்ப்பிணியை 5 கயவர்களும் காட்டுமிராண்டித் தனமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அடிபட்ட நிலையிலும் தன்னுடை காதலியை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அந்த இளைஞருக்கு பலன் அளிக்கவில்லை.

5 பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்து கருவில் இருந்த குழந்தை முகத்தை பார்க்கும் கனவு சிதைந்து போனது. காதலியையும் காப்பாற்ற முடியாமல், தன்னுடைய குழந்தையும் இழந்த காதலன் மிகுந்த விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விஷம் வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதிய அந்த பட்டியலினத்து பெண் எதையுமே வெளியில் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார். பின்னர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் துருவி துருவி விசாரிக்க ஜிதேந்திரா என்ற கயவர் சிக்கினார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில் வேறு வழியின்றி அவருக்கும் அவருடைய காதலுனுக்கும் ஏற்பட்ட அவலங்களை காவல்துறையினரிடம் அழுது கொட்டினார் அந்த பெண். இதையடுத்து 19 வயது பட்டியலினப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது இளைஞரை தாக்கியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 5 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை, போக்சோ உள்ளிட்ட எவ்வளவு சட்டங்களை மத்திய அரசு இயற்றினாலும் அதுகுறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தினால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.