கணவனுடன் நெருக்கமாக இருந்த மனைவி! ஜன்னல் வழியாக நுழைந்த காதலன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திருமணமான தனது காதலி கணவனுடன் இருப்பது தெரியாமல் வீட்டின் ஜன்னல் வழியாக நுழைந்த காதலனுக்கு விபரீத முடிவு ஏற்பட்டது.


மும்பையில் 19 வயதான ஷேக் என்ற இளைஞன்  தனது தாய் மாமாவுடன் NYL மருத்துவமனைக்கு அருகில் இருக்கக்கூடிய பிளாட்டின் பதினைந்தாவது மாடியில் வசித்து வந்தார். அதே பிளாட்டின் ஒன்பதாவது மாடியில் 24 வயது  திருமணமான பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் ஷேக்கும் துவக்கத்தில் காதலித்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணுக்கு திருமணமான பிறகும் காதலனுடன் தனது உறவை தொடர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி காதலியின் வீட்டுக்கு காதலன் ஷேக் சென்று வந்துள்ளான்.

ஒருநாள் ஷேக் காதலி வீட்டுக்குள் இருந்து வெளியே வருவதை அவரது மாமா பார்த்துள்ளார். இதையடுத்து ஒருநாள் காதலியை சந்திக்க வாசல் வழியாக செல்லாமல் ஜன்னல் வழியாக செல்ல திட்டமிட்டுள்ளார். 

குழாய் மூலம் ஒன்பதாவது மாடிக்கு ஏறி ஜன்னல் வழியாக காதலி வீட்டுக்கு உள்ளே செல்ல முயற்சித்துள்ளார். அப்போது காதலி கணவனுடன் நெருக்கமாக இருப்பதை கண்டவுடன்  திரும்பிச் செல்ல நினைத்த அவர் நிலை தடுமாறி ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு பிளாட்டின் வாட்ச்மேன் தண்ணீர் நிரப்ப சென்ற போது இறந்த சடலத்தை கண்டு பதறிய நிலையில் அக்ரிபடா காவல் நிலையத்திற்கும், அவரது நண்பர் மற்றும் மாமாவிற்கு தகவல் அளித்தார். 

தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் இளைஞனின் மாமா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காதலியை சந்திக்க சென்று உயிரை இழந்த இளைஞனை நினைத்து வருந்துவதா அல்லது இரக்கப்படுவதா என்பது தெரியவில்லை.