கணவனை பிரிந்து வர மறுத்த 19 வயது கள்ளக்காதலி! 25 வயது கள்ளக் காதலன் அரங்கேற்றிய விபரீதம்!

டெல்லியில் தனது கணவனை விட்டுவிட்டு வரமறுத்த 19 வயது இளம்பெண்ணை சரமாரியாகக் கத்தியால் குத்திய கள்ளக் காதலன் தன்னைத் தானே கத்தியால் கழுத்தில் அறுத்துக்கொண்டான்.


டெல்லியைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணான பிங்கியை கடந்த ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவருக்கு அவரது பெற்றொர் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஒரே ஆண்டில் ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் பிங்கியும் அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து  வந்தார். 

வாழ்க்கை வெகு அழகாகத் தான் சென்று கொண்டிருந்ததது பிங்கி  சன்னி என்ற 25 வயது நபரை சந்திக்கும் வரை. இந்த ஆண்டு காதலர் தினத்தன்று சன்னியை சந்தித்த பிங்கி கிளர்ச்சியடைந்தார். இதையடுத்து இருவரு அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர். இந்நிலையில் தனது உறவு முறைகேடானது என உணர்ந்த பிங்கி, சன்னியைத் தவிர்க்கத் தொடங்கினார். 

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சன்னி, பிங்கி தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு அடிக்கடி நச்சரிக்கத் தொடங்கினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பிங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாக எச்சரித்துவந்தார். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிங்கியை சந்தித்த சன்னி, பிங்கியின் நெஞ்சு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியதோடு, தன்னைத் தானே கழுத்தில் அறுத்துக்கொண்டார். இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிங்கி உயிரிழந்த நிலையில் சன்னிக்கு தீவிர் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.