எனக்கு 19..! அவளுக்கு 20..! நடுரோடுனு கூட பார்க்கமாட்டோம்..! சிசிடிவி கேமராவால் சிக்கிய இளம் பெண்கள்!

சென்னை: பைக் திருட முயன்ற 19 வயது பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார்.


சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் யாசர் அராபத். இவர் எப்போதும் வீட்டு வாசலில் பைக் நிறுத்தி வைப்பது வழக்கமாகும். சில நாள் முன்பாக, அவரது வீட்டின் முன் பைக் நிறுத்தி வைத்துவிட்டு, சாப்பிட சென்றுள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே இருந்தபடியே சிசிடிவி கேமிரா மூலமாக பைக்கை கண்காணித்துள்ளார்.

அப்போது அவரது பைக் முன்பாக 2 பெண்கள் சந்தேகத்தின் பேரில் வந்து நின்று, கள்ளசாவி போட்டு திருட முயன்றதை அவர் கண்டுபிடித்துள்ளார். உடனே யாசர் வெளியே ஓடிவந்தபோது, அந்த 2 பெண்கள் தப்பியோடி விட்டனர். ஆனால், அவர்களில் ஒருவரை யாசர் துரத்திப் பிடித்துவிட்டார். அவரை போலீசிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்ட பெண்ணின் பெயர் சந்தியா. அவரது வயது 19, திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவருடன் வந்த இன்னொரு பெண்ணின் பெயர் மோனிஷா (20 வயது).  வறுமை காரணமாக, இருவரும் சேர்ந்து ஜாம்பஜார் போலீஸ் நிலையம் பகுதியில் பூ விற்று வந்துள்ளனர். பிறகு, கஞ்சா விற்றவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பைக் திருட முயன்றதாக போலீசில் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், மோனிஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.