மாணவிகளின் செல்போனில் பார்க்க கூடாததை பார்த்த பேராசிரியர்..! அதிர்ச்சியில் இளம் மாணவி எடுத்த விபரீத முடிவு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி என்பவரின் மகள் ஜெனிபர் 19,இவர் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி தனது படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற ஜெனிபரை சகதோழிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களிடம் டாய்லெட் சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இச்சம்பவம் குறித்து உடனே காவல்துறையினறுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் ஜெனிபர் தனது அறையில் எழுதி வைத்த இரண்டு பக்க கடிதத்தை கைப்பற்றினர்.

அந்தக்கடிதத்தில் ஜெனிபர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தனது நெருங்கிய நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதற்காக மன்னிப்பு கேட்டும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தில்: நம் கல்லூரி நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது எனவும். தனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

இந்த கடிதத்தை ஜெனிபரின் தாய் செல்வி மற்றும் சக மாணவிகள் மற்றும் தோழிகள் நேற்று மாலை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரை சந்தித்து துறைத்தலைவரான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அவர்களிடம் கூறி அனுப்பிவைத்தார்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த மாதம் நடந்த தேர்விற்கான கேள்வி தாள் லீக் ஆகி மாணவர்களின் வாட்ஸ் அப்பில் பரவியது. இதையறிந்த துறைத்தலைவர். மாணவர்களின் தொலைபேசிகளை வாங்கி ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளின் செல்போனில் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் செல்பி இருந்துள்ளது.

இதுபற்றி அவர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜெனிபர் பினாயில் குடித்துவிட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.