19 வயது இளம் பெண்! சினிமா வாய்ப்பு! செக்ஸ் வல்லுறவு! 55 வயது தொழில் அதிபரின் லீலைகள்!

இளம்பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பாலிவுட்டில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்த இளம் பெண் இரண்டு ஆடிஷன்களுக்கும் சென்றார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தோழியின் வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்ணுக்கு காசில்லாமல் நகர வாழ்க்கை கடினமாக இருந்தது. 

இந்நிலையில்தான் மற்றொரு நண்பர் மூலம் போரிவில்லியைச் சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வர் அத்வானியின் அறிமுகமும் கிடைத்தது. இந்தியா மட்டுமன்றின்றி துபாயிலும் தொழில்கள், வியாபாரங்களைக் கொண்ட 55 வயது ஈஸ்வரின் மனைவி மக்கள் துபாயில் உள்ளனர் .

இளம் பெண்ணுக்கு வேலை வாய்ப்பும் போரிவில்லியில் உள்ள தனது ஃபிளாட்டிலேயே தங்க இடமும் கொடுத்தார். பாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுத்தர அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை வந்த இளம் பெண்ணின் தாய் தனது மகள் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கும் திருப்தியுடன் சொந்த ஊருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் ஈஸ்வரின் சுயரூபம் இளம் பெண்ணுக்கு தெரிய வந்தது. இரவு நேரத்தில் அடிக்கடி இளம் பெண்ணின் இடத்துக்கு வந்த ஈஸ்வர் ஒரு நாள் இரவு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான இளம் பெண்ணின் புகாரின் பேரில் ஈஸ்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.