வேலை தர்றேன்னு சொன்னானுங்க..! ஆனால் 4 நாட்கள் பூட்டிய அறைக்குள் வைத்து மாறி மாறி ரேப் செய்தான்..! கதறிய 19 வயது பெண்! அதிர்ந்த தலைநகர்!

பெங்களூரு: வேலை வாங்கி தருவதாகக் கூறி, இளம்பெண்ணை 4 நாளாக பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


வங்கதேசத்தில் உள்ள நரேய்ல் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், வறுமை காரணமாக, வேலை தேடி, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவர் இந்திய எல்லையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த பெண் பெங்களூருவில் உள்ள பியூட்டி பார்லரில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.  

பெங்களூரு சென்றதும், இளம்பெண்ணை ஒரு ஆணிடம் ஒப்படைத்துவிட்டாராம். அந்த நபர், இளம்பெண்ணை, 4 நாளாக அறையில் அடைத்து வைத்து, கதற கதற பலாத்காரம் செய்திருக்கிறார். இளம்பெண்ணிற்கு, வங்க மொழியை தவிர வேறு ஏதும் தெரியாத நிலையில், ஒருநாள் திடீரென தப்பிவந்துவிட்டார்.

அருகில் உள்ள யெலஹங்கா போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக அவர் புகார் செய்திருக்கிறார். இளம்பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், இதன்பேரில் விசாரிக்கின்றனர். பெங்களூருவிற்கு சமீப காலமாக, வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் சட்டவிரோதமாக வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.