பெற்றோர் மீது 19 வயது இளம் பெண் கூறிய அதிர வைக்கும் புகார்! பதற வைக்கும் காரணம்!

வேறு சாதி இளைஞனைக் காதலிப்பதால் தன்னை பெற்றோர் கொல்ல முயல்வதாக இளம்பெண் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மும்பையைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா சட்டம் பயின்று வருகிறார் ‌. 19 வயதான இந்தப் பெண் இதே வயதுடையை விராஜ் என்ற இளைஞனை காதலித்து வருகிறார் ‌ இந்த விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இருவரின் ஜாதியும் வேறு வேறு என்பதால் பெண்ணை அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் பிரியங்கா தொடர்ந்து விராஜை காதலித்து வந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே போன பிரியங்காவின் உறவினர்கள் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தியதுடன் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். தனது உறவினர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது காதலனுக்கும் தனது குடும்பத்தினர் கடந்த இரண்டு மாதங்களாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதனால் தனது காதலனுக்கு மனநிலை சமன்பாடு தகர்ந்து விட்டதாக கூறியுள்ள பிரியங்கா இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது குடும்பத்தினரும் போது தனக்கும் தனது காதலனுக்கும் பாதுகாப்பு கேட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த இளைஞனுக்கு 19 வயதே ஆவதால் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.