நம்பி வந்த காதலி! அடித்து கொன்று வீட்டிற்குள் புதைப்பு! புது மாப்பிள்ளையான பிறகு சிக்க வைத்த சென்டிமெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற வீரமுத்து. இவரது 19 வயது மகள் முத்தரசி நவாமரத்துப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.


முத்தரசியின் மூத்த சகோதரி தமிழரசி. திருமணமாகி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆற்றுக்கால் புது ஊரில் வசித்து வந்தார். அடிக்கடி தனது அக்கா வீட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த முத்தரசிக்கு ஆற்றுக்கால் புதூரைச் சேர்ந்த பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென முத்தரசி மாயமான நிலையில் அது குறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதுதொடர்பாக பரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பரத்துக்கு உரிய மரியாதைகள் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது பரத் முத்தரசியை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

முத்தரசிக்கு திருமண ஆசை காட்டி ஆற்றுக்கால் புதூரில் தனியாக வீடு எடுத்து பரத் தங்க வைத்த நிலையில் விரைவிலேயே இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பரத் இருசக்கர வாகனத்தில் முத்தரசியை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த பரத் முத்தரசியை பலமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது

அதிர்ச்சி அடைந்த பரத் முத்தரசியை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்

ஆனால் அங்கு சென்றபோது முத்தரசி உயிரிழந்து இருந்தது தெரியவந்தது இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு பின்புறத்திலேயே முத்தரசி உடலை புதைத்ததும் பரத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்ததும் தெரியவந்தது.

திருமணம் நிச்சயமான வீட்டில் ஒரு சடலம் இருக்கக்கூடாது என்கிற சென்டிமெண்டிற்காக மீண்டும் தோண்டி சடலத்தை வெளியே எடுத்த குடும்பத்தினர் அருகில் உள்ள பொட்டல் ஒன்றில் கொண்டு சென்று உடலை எரித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் நிச்சயம் செய்த பெண்ணுடன் பரத்துக்கு திருமணம் நடைபெற்றதும் தெரியவந்தது இதுதொடர்பாக பரத்  அவரது தாய் மற்றும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.