ஆபத்தில் தவித்த பெண்ணுக்கு உதவிய இளைஞன்! 1 வாரம் சிறையில் அடைக்கப்பட்ட விபரீதம்! அதிர வைக்கும் காரணம்! நேர்ந்த விபரீதம்!

இளம்பெண் ஒருவருக்கு உதவி செய்த பாவத்திற்காக, அதே பெண்ணால் பாலியல் புகாரில் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.


ஆஸ்திரேலியா நாட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டின் சிட்னி நகருக்கு அருகே 19 வயது இளம்பெண் ஒருவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், கார் சிறிது சேதமடைந்தது. அதன் உரிமையாளரான அந்த இளம்பெண், காரை பழுது பார்ப்பதற்காக, அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போது, பாஸிக் எனும் 36 வயது நபரை அந்த பெண் சந்தித்து உதவி கேட்டுள்ளார். அவரும் காரை சரி செய்து தருகிறார். சிறிது நேரம் பாஸிக்கிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண், பிறகு, வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த நாள் திடீரென பாலியல் புகாரில் பாஸிக் கைது செய்யப்பட்டார். இவர் மீது அப்படி புகார் அளித்தவர், அந்த இளம்பெண்தான். இதனால்,2 வாரம் சிறையில் வாடிய பாஸிக், விசாரணையில் நான் ஒரு அப்பாவி என அடிக்கடி கூறிவந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் கார் வழியில் எங்கேனும் ரிப்பேராகி நின்றால் உதவி செய்வதற்காகவே அவரை பின்தொடர்ந்து சென்றேன், அதனை நீங்களே சிசிடிவி காட்சிகளில் பாருங்கள், எனவும் பாஸிக் கூறியுள்ளார்.

இதன்பேரில், போலீசார் மீண்டும சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலியல்  சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனஉறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை சுற்றி வளைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது, அந்த பெண் பொய் புகார் அளித்ததை ஒப்புக் கொண்டார். உடனே, பாஸிக்கை விடுவித்த நீதிமன்றம், குறிப்பிட்ட இளம்பெண்ணை விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளது.

விடுதலை கிடைத்தாலும் பாஸிக்கால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. காரணம், பொய் புகாரில் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி உண்மை தெரியாமல், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உதவி செய்ய சென்ற நபருக்கு, இப்படி அடுத்தடுத்த சோகங்கள் நிகழ்வது பரிதாபமாக உள்ளது.