நட்ட நடுரோட்டில் இளம் பெண் செய்து வரும் செயல்..! பெற்றோர் கண்டிப்பையும் மீறி பிடிவாதம்..! ஆனால்..?

டெல்லி: பெற்றோர் எதிர்ப்பை மீறி உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


19 வயது பெண் ராதிகா ஜோஷி என்பவர்தான் இப்படியான செயல் செய்து வருகிறார். அவருடைய நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழந்த நிலையில் மாறறு உறுப்பு கிடைக்காததால் உயிரிழந்ததை பார்த்து விரக்தியடைந்த ராதிகா ஜோஷி, உடல் உறுப்பு தானம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தார்.

இதற்காக, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னார்வ அமைப்பு ஒன்றை நிறுவி, உடல் உறுப்பு தானம் தொடர்பான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார். மாணவ, மாணவியர், இளைய தலைமுறையினரை குறிவைத்து அவர் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார்.

இதுவரையிலும், 1000க்கும் அதிகமானோர் ராதாகாவின் பேச்சை கேட்டு உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்து, உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.