மும்பை: பிறந்த நாளன்று இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த நாள் கொண்டாடி திரும்பிய 19 வயது பெண்! வழிமறித்த 4 ஆண்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! மனதை உலுக்கும் சம்பவம்!
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்தான் பாதிக்கப்பட்டவர். இவர், தனது தோழியின் அழைப்பை ஏற்று கடந்த மாதம் மும்பை சென்றுள்ளார்.
இதன்போது, ஜூலை 7ம் தேதி அந்த பெண்ணிற்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனை தோழியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர் அவுரங்காபாத் திரும்பிய அந்த பெண்ணை, வழியில் 4 பேர் கடத்திச் சென்று, கூட்டாக பலாத்காரம் செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார்களாம்.
பின்னர் வீட்டிற்கு வந்து சேர்ந்த இளம்பெண், அவ்வப்போது தனிமையில் கதறி அழுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும், பிறப்புறப்பில் தீராத வலி இருந்ததால் இதுபற்றி பெற்றோரிடம் புகார் செய்திருக்கிறார்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்று, பரிசோதித்துள்ளனர். அதில், இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக தெரியவந்துள்ளது. இதை டாக்டர்கள் சொன்னதும், அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி சிறுமியை கேட்டபோது அவர் அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் இப்படி செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.