தொடையின் அந்த இடத்தில் ஏற்பட்ட முறிவு..! எந்த நேரத்திலும் கால்கள் உடையும் அபாயம்! 19 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

லண்டன்: இளம்பெண் ஒருவர் எந்நேரமும் உடைந்து விழக்கூடிய அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


கெய்ட்லின் வாட்டர்சன் என்ற 19 வயதான இளம்பெண்ணின் இடது கால் மிகவும் பலகீனமாக இருந்துள்ளது. கால் அசைவு மற்றும் அதன் இயக்கம் மிகவும் சந்தேகமாக இருக்கவே, அவர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய தீர்மானித்தார். இதன்படி, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு fibrous dysplasia எனும் அரிய வகை எலும்பு நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், கால் மூட்டு பகுதியில் இருந்து முழங்கால் எலும்பு படிப்படியாக பலவீனமடைந்து, விலகிச் சென்று, உடைந்து விழக்கூடும் என்றும், அதற்குப் பதிலாக சதை வளர்ச்சி அப்பகுதியில் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

அதேசமயம், அப்பெண்ணின் வலது கால் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது. இடது காலில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என மருத்துவர்கள் தீவிர ஆலோசனை செய்கின்றனர். இதற்கிடையே, தனது இடது கால் உடைந்து விழலாம் என்பதால் உடனடியாக, அறுவை சிகிச்சை செய்து, உலோகத் தகடுகள் வைத்து அதனை கட்டும்படி வாட்டர்சன் கோரியுள்ளார்.

இதையேற்று, மருத்துவர்களும் எலும்பு அறுவை சிகிச்சை செய்து, இடது முழங்கால் எலும்பை ஸ்க்ரூ, மெட்டல் போட்டு கட்டியுள்ளனர். ஆனாலும், எலும்பு வலு பெறவில்லை. பலகீனமாக, மூட்டு பகுதியில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வது நிற்கவில்லை. தற்சமயம், எலும்பு உடைந்து விழுவதற்கு மருத்துவ உதவிகளுடன் தயாராக உள்ளார். அவரது பாதிப்பை புரிந்துகொண்டு, பக்க பலமாக, அவரது காதலனும் உடன் நிற்கிறார். இடது கால் எலும்பு உடைந்து விழுந்த பின், அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்க உள்ளதாக, வாட்டர்சன் குறிப்பிடுகிறார்.