ஒரே ஒரு மாதம் தான் அதை செய்தேன்..! இப்போது உயிருக்கே போராடுகிறேன்..! 16 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

லண்டன்: இ-சிகரெட் குடித்தபோது நிகழ்ந்த விபரீதத்தால் பிரிட்டன் இளைஞன் உயிருக்குப் போராடி வருகிறான்.


உலகம் முழுவதும் இ-சிகரெட் எனப்படும் அதி ஆடம்பர சிகரெட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த இவான் ஃபிஷர் (16 வயது) என்ற இளைஞன், கடந்த 2017ம் ஆண்டில் இ-சிகரெட் புகைக்க தொடங்கியுள்ளான். சரியாக 4 மாதங்கள் ஒரே ஆடம்பரமாகச் சென்ற நிலையில், திடீரென இளைஞனின் உடல்நலம் குன்ற தொடங்கியுள்ளது. குறிப்பாக, இ-சிகரெட்டில் இருந்து கசிந்த ஒருவித கெமிக்கல் திரவம் சிறுவனின் கைகளில் பட்டதாகவும், அதனை இளைஞன் முகர்ந்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அவனது உயிர் திடீரென ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளது. தற்சமயம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள், நியோன் கிரீன் திரவத்தை அவன் முகர்ந்திருக்கலாம் என்றும், இதனால் நுரையீரல் செயலிழந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழிந்துவிட்டன. விரைவில் அவன் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது. இ-சிகரெட் பயன்படுத்துவோருக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக இருக்கட்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

பிரிட்டனில் ஏற்கனவே இ-சிகரெட் குடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நோட்டிங்காம் பகுதியை சேர்ந்த மேற்கண்ட இளைஞன் உயிரிழக்கும்பட்சத்தில் அது இ-சிகரெட்டிற்கு நிகழும் 2வது உயிர்ப்பலியாக இருக்கும் என பிரிட்டன்வாசிகள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.