10 வயதுச் சிறுமி முன் ஆடைகளை களைந்து சுய பாலியல் இன்பம்! வக்கிர இளைஞரின் விபரீத செயல்!

மும்பை நலசோப்பாராவில் 10 வயதுச் சிறுமியின் முன்னிலையில் சுய பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை, மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


பக்கத்துக் குடியிருப்புக் கட்டிடத்தில் இருந்த பெண் ஒருவர் அந்த இளைஞனின் நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது செல்ஃபோனில் அவனது  நடவடிக்கையை படம் பிடித்ததோடு, குடியிருப்பில் இருந்த மற்றவர்களிடம் அதுகுறித்து தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இளைஞனை நெருங்கிய அனைவரும் அவனை அடித்து  உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் 19 வயதான அவனது பெயர் சூரஜ் விஸ்வகர்மா என்றும் அவன் அருகில் உள்ள வசாய் லிங்க் சாலையில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. 

மேலும் அவன் கந்திவிலியில் உள்ள ஒரு கல்லூரில் பி.எஸ்.சி. ஐ.டி. படித்து வருவதும் தெரிய வந்தது. சூரஜ் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூரஜின் வீட்டினரிடம் விசாரணை மேற்கொண்ட போது  அவன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவன் மீது இது போன்ற புகார்கள் இதற்கு முன்பும் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.