உனக்கு 19 வயசு தான் ஆகுது..! அந்த 18 வயது பொண்ண படிக்கவிடு..! காதலனுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

காதலனுடன் சென்ற 18 வயது இளைஞனை உயர்நீதிமன்றம் கண்டித்து சம்பவமானது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளியின் 18 வயது மகள் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது இளைஞருடன் அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.

காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனம் உடைந்து போன காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது. இந்நிலையில் பெண்ணின் தந்தையார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதாவது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதால், கல்லூரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கானது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இருவீட்டு பெரியவர்களும் விசாரணையில் கலந்து கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் இருந்து படிக்க விருப்பம் இல்லாததால், கல்லூரி விடுதியிலிருந்து படிக்க வேண்டும். 21 வயது நிரம்பிய பிறகு இருவீட்டாரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணத்தை விட படிப்புதான் மிகவும் முக்கியமானது" என்று கூறி தீர்ப்பளித்தனர்.

இந்த சம்பவமானது மதுரை உயர்நீதிமன்றத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.