17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமி கர்ப்பம்! அதிர வைக்கும் காரணம்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் ராஜ். ராஜின் வயது 19. இவர் கிளியனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுடன் ராஜுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் விளைவாக அந்த இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சம்பவம் அறிந்த பெற்றோர் உடனடியாக நிகழ்ந்தவற்றை கூறி பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.