செக்சுக்கு அழைத்த 19 வயசு சிறுவன் ! வரமறுத்த மாடல் அழகி! பிறகு நிகழ்ந்த திடுக் சம்பவம்!

ஆசைக்கு இணங்காததால், மாடல் அழகி மான்சி தீக்‌ஷித்தை அடித்துக் கொன்றதாக, அவரது ஃபோட்டோகிராபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.


மும்பையை சேர்ந்தவர், மான்சி தீக்‌ஷித் (20 வயது). மாடல் அழகியாக வலம் வந்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, தெருவில் சடலமாக வீசப்பட்டிருந்தார். 

 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி மும்பையின் பாங்குர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்து, 3 மாதங்கள் கடந்த சூழலில், தற்போது புதிய திருப்பமாக, மான்சி தீக்‌ஷித்தை ஃபோட்டோகிராபர் ஒருவர் அடித்துக் கொன்றதாக, தெரியவந்துள்ளது. 

 

சம்பந்தப்பட்ட ஃபோட்டோகிராபரே, கொலை செய்ததை, போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதன்படி, சையது முஸாமில் என்ற அந்த ஃபோட்டோகிராபருக்கு 19 வயது. இவரது ஃபோட்டோகிராபி திறமையை பார்த்து, மான்சி தீக்‌ஷித், நெருங்கிப் பழகியுள்ளார். 

 

அத்துடன், தனக்கு பிரத்யேக ஃபோட்டோஷூட் நடத்தி தரும்படி, மான்சி தீக்‌ஷித் கேட்டுக் கொண்டுள்ளார். இதையேற்று, சையது முஸாமில் ஃபோட்டோஷூட் நடத்தச் சென்றுள்ளார். அப்போது, மான்சி மீது, அவரை விட ஒரு வயது குறைவான சையது முஸாமில்லுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. 

 

செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்கும்படி மான்சியிடம் சையது கூறியுள்ளார். ஆனால், அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த சையது, மர நாற்காலி ஒன்றை எடுத்து, மான்சியின் தலை மீது தாக்கியுள்ளார். 

 

மான்சி சுயநினைவின்றி கீழே விழுந்த நிலையில், அவரை பலாத்காரம் செய்த சையது, பின்னர், மான்சியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு கொலை செய்துள்ளார். அவரது சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி எடுத்தபடி, வாடகைக்கு 4 கார்களை பிடித்து, மாறி மாறி சென்றுள்ளார்.

 

   மலாட் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென காரை விட்டு இறங்கிய சையது, மான்சியின் சடலத்தை தெருவோரம் போட்டுவிட்டு, ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுள்ளார். 

 

இதனை நேரில் பார்த்த, கார் டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மான்சியை பிரேத பரிசோதனை செய்ததில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்தது. அத்துடன், சையதுவின் உடைகளில் இருந்து விந்து மாதிரியும் சேகரிக்கப்பட்டு, அவர்தான் மான்சியை பலாத்காரம் செய்தார் என்பதும் உறுதியாகியுள்ளது. 

 

சையதுவை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் ஐதராபாத் சென்றுவிட்டார். அங்கு தலைமறைவாக இருந்துவந்த சையது, இன்று மும்பை வருவதாக, அவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சையதுவின் வீட்டில் பதுங்கியிருந்த போலீசார், அவர் நேரில் வந்ததும் கைது செய்தனர். அப்போது, கொலை செய்ததையும் சையது ஒப்புக் கொண்டார்.

 

   மாடல் அழகியை ஃபோட்டோகிராபரே அடித்துக் கொன்ற சம்பவம், மாடலிங் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.