19 வயது இளம் பெண்ணை தாலி கட்டி மனைவியாக்கிய 16 வயது சிறுவன்..! அனைவரையும் அதிர வைத்த திருமணம்!

19 வயது இளம்பெண்னை 16 வயது இளைஞன் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவமானது பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவை சேர்ந்த 16 வயது சிறுவன் குறிப்பிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் செய்து வந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இருவருக்குமிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலிக்க தொடங்கினர்.

காதலை வெளியே தெரிவிக்க தைரியம் இல்லாத அந்த இளம்பெண், 16 வயது இளைஞனை நம்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த இளைஞனின் பெற்றோர் ஒருவழியாக மனம் இறங்கிவந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அதேநேரத்தில் தங்களுடைய மகள் வீட்டை விட்டு வெளியேறிய துக்கத்தை தாங்கிக்கொள்ள இயலாத பெற்றோர் நேபாளம் சென்றுவிட்டனர். இதனிடையே அந்த இளைஞனின் வயது குறித்து சந்தேகித்த சிலர் அப்போது காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்‌.

காவல்துறையினர் பல நாட்கள் அந்த இளைஞனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞனின் வயது 16 தான் என்பது உறுதியானது. உடனடியாக காவல்துறையினர் இளைஞன், அவனுடைய பெற்றோர் மற்றும் மனைவியை குழந்தை திருமணம் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.