சோசியல் மீடியா ரிலேசன்! 12 வயது சிறுமியுடன் தகாத உறவு..! 19 வயது நபர் கைது..!

12 வயது இளம்பெண்ணை 19 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஏரிக் ஜெப்ஷன். இவருடைய வயது 19. இவர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 12 வயதேயான சிறுமியிடம் சமூக வலைத்தளங்களில் தொடர்பு வைத்துள்ளார். ஸ்னாப்சாட் என்ற செயலியில் இருவரும் கடந்த 3 மாதங்களாக உரையாடி வந்துள்ளனர்.

தொடக்கத்தில் நாகரீகமாக இருந்த உரையாடல் காலம் செல்ல செல்ல காம உரையாடல்களாக மாறின. இளைஞர் அந்த சிறுமியை பலவந்தப்படுத்தி அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த சிறுமியின் ஆபாச புகைப்படங்களையும் அதே செயலியின் மூலம் பெற்றுள்ளார். 

இவ்வாறு கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்த பின்னர், அந்த இளைஞர் மாணவியுடன் உறவை வைத்து கொள்ள வேண்டும் என்று துடித்துள்ளார். அதன்படி அந்த சிறுமியை அவர் பலமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். தன்னுடைய வயதை காட்டி சிறுமி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் தொடக்கத்தில் மறுத்துவந்த சிறுமியால் ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க இயலவில்லை. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

இளைஞர் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடி அலைந்த பின்னர் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.

புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேற்கூறப்பட்ட தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவமானது பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.