கர்நாடக மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி 5 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பரவவிட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்ஆப்பில் அந்த மாதிரி வீடியோவை ஷேர் செய்பவரா நீங்கள்? அப்ப இதைப் படிங்க முதல்ல!

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் போலீசார் இரண்டு தனிப் படைகளை அமைத்தனர். ஒரு பிரிவினர் வீடியோவில் இருந்த 5 குற்றவாளிகளான அந்த மாணவியின் சக மாணவர்களை கைது செய்தனர்.
மற்றொரு படையினர் அந்த சம்பவம் தொடர்பான வீடியோவை இணையதளத்தில் பரவவிட்டவர்களைத் தேடினர். போலீசாரின் விசாரணையில் அதே கல்லூரியைச் சேர்ந்த 11 பேர் அந்த வீடியோவை பரவ விட்டது தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர்.
கல்லூரியில் தேர்தல் நடந்த நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவனின் பெயரை கெடுக்க மற்றொரு தரப்பினர் இந்த வீடியோவை பரவ விட்டது தெரிய வந்தது. இதில் அந்தப் பெண் பாழ்படுத்தபட்டதும் அம்பலத்துக்கு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடைபெற்ற போதும் இந்த வீடியோவை வைத்துக் கொண்டு அந்த 5 நபர்களும் அந்தப் பெண்ணை மிரட்டி வந்ததற்கு அஞ்சி அந்தப் பெண் நடந்ததை வெளியில் தெரிவிக்காமல் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தொடர்புடைய பெண்ணிடம் புகாரைப் பெற்று போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.