10ம் கிளாஸ் படிச்சிட்டு டாக்டர்! ஒரே நாளில் சிக்கிய 19 பேர்! வேலூர் பரபரப்பு!

வேலூரில் சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட சோதனையில் 19 போலி மருத்துவர்கள் பிடிபட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளாக தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த தகவல்களின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல் துறையின் உதவியுடன் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் 35 குழுக்களாக பிரிந்து 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில் 15க்கும் மேற்பட்டோர் பிடிப்பட்டனர். அவர்களின் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

10க்கும் மேற்பட்டோர் சோதனையை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை பிடிக்க பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள், முறையான பட்டப்படிப்பு இல்லாமல் மருத்துகடைகள், வீடுகளில் கிளினிக் வைத்துள்ளவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் சோதனை நிகழ்ந்தது.

மக்களின் உயிர்களில் இப்படி விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் யார்மின் தெரிவித்தார்.

மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.