20 ஆண்டுகள்! 440 டீன் ஏஜ் பையன்களுடன் ஹோமோசெக்ஸ்! பதற வைத்த பயிற்சியாளர்!

அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் 440 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விளையாட்டுப் பயிற்சியாளருக்கு நீதிமன்றம் 180 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


கூடைப் பந்து பயிற்சியாளரான கிரேக் ஸ்டீபன் சிறுவர்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். இவர் நடத்தி வந்த லோவா பார்ன் ஸ்ட்ரோமர் என்ற விளையாட்டு அமைப்பு மூலம் சிறுவர்களுக்கான விளையாட்டு வாய்ப்புகள், ஊக்கத் தொகை உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார். 

இது தொடர்பாக தன்னிடம் வரும் சிறுவர்களிடம் இவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவற்றை படமாகவும் விடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு சிறுவர்களை மிரட்டி பணிய வைத்ததாகவும் கூறப்படுகிறது. பல சிறுவர்கள் உறங்கும் போது அவர்களது பிறப்புறுப்பை இவர் தொட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் இவர் மறைத்து வைத்திருந்த வீடியோக்கள் படங்கள் தொடர்பான ஹார்ட் டிஸ்குகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் காவல் துறையில் தெரிவித்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த ஹார்ட் டிஸ்குகளை கைப்பற்றினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது ஸ்டீபன் 20 ஆண்டுளில் 440 சிறுவர்களிடம் அத்துமீறியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ஸ்டீபனுக்கு 180 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.