குரூப் செ•••ஸ் உல்லாசம்! 20வது மாடியில் இருந்து 18 வயது பெண் நிர்வாணமாக விழுந்ததன் பரபரப்பு பின்னணி!

மலேசியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு 18 வயது இளம்பெண் 20 ஆவது மாடியிலிருந்து நிர்வாண கோலத்தில் கீழே விழுந்து இறந்த சம்பவம் தற்போது காவல்துறையினரால் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நெதர்லாந்தைச் சேர்ந்த இவானா ஸ்மித் என்ற 18 வயது இளம்பெண் தனது சிறுவயதிலேயே மலேசிய நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கே வசித்து வந்துள்ளார். பிரபல அழகிய மாடலான இவர் மலேசியாவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 டிசம்பர் மாதம் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீட்டில் பேச்சுலர்களுக்கான மது விருந்து ஒன்று அளிக்கப்பட்டது.

அந்த விருந்தில் அமெரிக்கா தம்பதியினர் இரண்டு பேர் மற்றும் சில இளைஞர்கள் கலந்து கொண்டு விருந்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர். இந்த விருந்தில் இவானா ஸ்மித் அதிக அளவு போதை ஆகி அங்குள்ளவர்கள் உடன் குரூப் செக்ஸ் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதையடுத்து ஆடை இன்றி முழு நிர்வாண கோலத்தில் 20ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார் இவானா ஸ்மித். இவரது மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லாத காரணத்தினால் அன்றைய தினத்தில் காவல்துறையினர் இதனை விபத்தாக வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் இவானா ஸ்மித்தின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றும் இதனை தகுந்த முறையில் விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து இதனை விசாரித்த நீதிமன்றம் தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் ஆகையால் இதை கொலை நோக்கில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தற்போது காவல்துறையினர் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டவர்களிடமும், மேலும் புதிய சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது உடனிருந்த அமெரிக்கா தம்பதி 2 பேரும் தற்போது மலேசிய நாட்டை விட்டு குடிபெயர்ந்தது வெளியேறி வேறு நாட்டிற்கு சென்றுவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் மீண்டும் கொலை வழக்காக மாறி விசாரணை செய்யப்பட உள்ளதால் மீண்டும் ஒரு அதிர்வலை இச்சம்பவத்தால் மலேசியா நாட்டில் ஏற்பட்டுள்ளது.