கொலையான தந்தையை பிஞ்சு கைகளால் அடக்கம் செய்த 18 மாத குழந்தை! தாய் வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

பிரிட்டனில் தந்தையின் உடலை அடக்கம் செய்ய 18 மாதக் குழந்தை உதவிய புகைப்படம் சமூக வலைதளவாசிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


பிரிட்டனின் சவுத் யார்க்ஸ் மாகாணத்தின் செபில்டு பகுதியில் லெவிஸ், ஓலிவா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கார்டர் பேக்ஷா என்ற 18 மாதக் குழந்தை உள்ளது.

கடந்த ஜூலை மாதம் லெவிஸ் வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவனை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள அவரது மனைவி ஓலிவியா கணவனின் உடலை அடக்கம் செய்யும்போது மகன் உதவிய காட்சியின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

தந்தையை சவப்பெட்டியில் வைத்து மூடிவிட்டு பின்னர் குழியில் வைக்கப்படுவதை என்னவென்று தெரியாமல் பார்க்கிறது அந்தக் குழந்தை. பின்னர் மற்றவர்களைப் போலவே மண்ணை வாரி தந்தையின் சவப்பெட்டி மேல் போடுகிறது.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பது போல லெவிசும் முன்விரோதம் காரணமாக ஏற்கனவே இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சமுதாயத்தில் தவறு செய்தால் அது நமக்கும் நடக்கும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக ஓலிவியா தெரிவித்துள்ளார்.

தந்தை இறந்தது தெரியாத அந்தக் குழந்தை அவர் எதிர்நோக்கி தினமும் வாசலில் காத்திருப்பதாக ஓலிவியா வேதனையுடன் தெரிவித்துள்ளார். தந்தை இனிமேல் வரமாட்டார் என்பதை எப்படி குழந்தைக்கு சொல்வேன் என தெரிவிக்கிறார். லெவிஸ் கொல்லப்ப்டடது குறித்து போலீசார் தெரிவிக்கையில் இதே பகுதியில் கடந்த 16 மாதங்களில் 10 பேர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டதாகவும், லெவிசை கொலை செய்தவர்கள் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.