தாயை தேடி நடுரோட்டில் ஓடிய 2 வயது குழந்தை! கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்!

தாயின் பின்னால் ஓடி வந்த மகன் காரில் அடிபட்டு உயிரிழந்த சம்பவமமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு கிசல் என்ற பெண் வசித்து வருகிறார். இவரின் வயது 18. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்புக்குள் கார் பார்க்கிங் வழியாக கிசல் சென்று கொண்டிருந்தார். அவருடைய கையில் 2-வது குழந்தையை தூக்கி நடந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாலேயே வேகமாக ஒரு குழந்தை ஓடி வந்து கொண்டிருந்தது. அது கிசல்லின் உறவினரின் குழந்தை என்று கூறப்படுகிறது. 

அக்குழந்தைக்கு பின்னால் கிசல்லின் மூத்த மகனான 18 மாத குழந்தை ஆலென் வெகு தொலைவில் இருந்து ஓடிவந்து கொண்டிருந்தான். அப்போது கார் பார்க்கிங் இடத்திலிருந்து ஒரு கார் புறப்பட்டது. அந்த கார் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஆலென் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஆலென் உயிரிழந்தான்.

ஆலென் உயிரிழந்ததை கண்ட கிசல் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். இதனிடையே குழந்தை பாதுகாப்பு இல்லாமல் கவனக்குறைவால் இறந்ததால் கிசல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய 2-வது குழந்தை கைக்குழந்தை என்பதால் அதனை வளர்ப்பதற்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை.

மேலும் 2-வது குழந்தையை அவர் காவல்துறையின் கண்காணிப்பிலேயே வளர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழந்தையை வளர்ப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் கிசல் 10 ஆண்டுகளாவது சிறையில் கழிக்க நேரிடும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.