சூடான் நாட்டின் கார்டோம் நகரத்தில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சூடான் செராமிக் டைல்ஸ் ஆலையில் டேங்கர் லாரி வெடித்தது! பற்றி எரிந்த தீயில் 18 இந்தியர்கள் உடல் கருகிய பயங்கரம்!

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சூடானில் பாஹ்ரி என்ற பகுதியில் சலூமி செராமிக் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கேஸ் டேங்கர் ஒன்று படபட வென வெடித்து சிதறியது.
எரிவாயு என்பதாலும், அங்கு ஏற்கனவே ரசயான பொருட்கள் இருந்ததாலும் உடனடியாக ஆலை முழுவதும் தீ மளமளவென பரவத் தொடங்கியது. தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும் முன்னரே பல தொழிலாளர்கள் தீயில் துடி துடித்து பலியாகினர். இந்த தீ விபத்தில் தமிழர்கள், இந்தியர்கள் 18 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மொத்தம் 23 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து சூடான் வெளியுறவுத்துறை, இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்த தகவல்களை சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். 00249 921917471 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சூடான் தீ விபத்து குறித்து உறவினர்கள் தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.