ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்பவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இப்போது வேலை இல்லா நாட்கள் என்ற பெயரில் தொழிலாளர்களை வெளியே அனுப்பி வருகிறார்கள்.
சென்னை, ஓசூரை தொடர்ந்து நாடு முழுவதும் அடுத்தடுத்து மூடப்படும் அசோக் லேலண்ட்! ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதன்படி அசோக் லேலண்ட் தலைமை அலுவலகத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு எத்தனை நாட்கள் வேலை இல்லை என்று ஒரு சர்குலர் அனுப்பியிருக்கிறது. அந்த சர்க்குலர் படி சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு 16 நாட்கள் வேலை கிடையாது. பாண்ட்நகரில் உள்ள அசோக்லேலண்ட் தொழிற்சாலையில் 18 நாட்கள் வேலை கிடையாது.
சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், ஓசூரிலுள்ள இரண்டு ஆலைகளில் மொத்தம் 3 நாட்கள் மற்றும் சிபிபிஎஸ் ஆலையில் 5 நாட்களும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார், மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா ஆலைகளில் தலா 10 நாட்களும், உத்தரகாண்ட் மாநிலம் பன்ட்நகர் ஆலையில் அதிகபட்சமாக 18 நாட்களும் செப்டம்பர் மாதம் வேலையில்லா நாட்களாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் உள்ள தனது அனைத்து ஆழைகளிலும் அசோக் லேலண்ட் கிட்டத்தட்ட தனது உற்பத்தியைநிறுத்திவிட்டது. நிலைமை இப்படியே போய்க்கொண்டு இருந்தால் மாதத்தில் நான்கு நாட்கள்தான் வேலையே நடக்கும் போல. மோடி சார், ஒவ்வொரு கார் கம்பெனி முதலாளியையும் கட்டிப் பிடிச்சு அழவாவது செய்யுங்களேன்.