ஈரான் நாட்டில் நேர்ந்த விமான விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பிய பக்கம் எல்லாம் ரத்தம்! சிதறிக் கிடக்கும் சடலங்கள்! ஈரான் தலைநகரில் பதற்றம்!
ஈரான் நாட்டின் கோய்மேனி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட உக்ரேனிய நாட்டின் விமானமான போயிங் ரக விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளது.
இந்த விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என 176 பேர் பயணித்துள்ளார்கள். இவர்கள் அனைவருமே இறந்துவிட்டதாக இன்று மதியம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளன விமான பாகங்களை அகற்றிவிட்டு, உள்ளே சிக்கியவர்களின் உடல்களை மீட்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பலரது உடல் முழுமையாக சேதம் அடைந்ததால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புகுழு சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார். கிடைக்கும் பாகங்களில் இருக்கும் சில அங்க அடையாளங்கள் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.