17 வயதில் கர்ப்பம்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிந்த உண்மை..! ஆனால் இளம்பெண் பிரசவத்தின் போது காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவில் கர்ப்பமாக இருந்த 17 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த பொழுது அவருக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அவர் ஆண் குழந்தையை பிரசவித்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


பிரித்தானியாவில் வோஸஸ்டெர்ஷையர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கேசி ஸ்ட்ரீக்லேண்ட் என்ற 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அந்த ஸ்கேனிங் முடிவில் அவருக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து கேசி மற்றும் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் அனைவரும் பிறக்கப் போகும் பெண் குழந்தைக்காக தேவையான எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து ஆவலாக காத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த மே மாதம் 27ஆம் தேதியன்று கேஸிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவவலி ஏற்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் கூறியபடி அவருக்கு பெண் குழந்தை பிறக்காமல் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது ஒரு பக்கம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் அழுத்தினாலும் சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மருத்துவர்களின் கூற்றுப்படி பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அவர்கள் குழம்பிப் போனார்கள். 

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் கூறுகையில், நாங்கள் அனைவரும் பிறக்கப்போகும் பேத்திக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம். அந்தக் குழந்தைக்கு இலா என பெயர் வைக்க வேண்டும் என்ற பெயரை கூட நாங்கள் தேர்ந்தெடுத்த வைத்திருந்தோம். இந்நிலையில் என்னுடைய மகள் ஆண் குழந்தையை ஈன்றுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியை தந்துள்ளது என்று தான் கூற வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களின் ஸ்கேன் முடிவுகள் எப்படி பொய்த்து போனது என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.