எங்க அப்பாவை விட்டுடு..! தந்தையுடன் தவறான உறவில் இருந்த பெண்ணுக்கு மகனால் ஏற்பட்ட விபரீதம்! தஞ்சை சம்பவம்!

பட்டுக்கோட்டை அருகே தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டு இருந்த பெண்ணை நண்பனுடன் இணைந்து 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள மதுக்கூர் என்ற இடத்தின் அருகில் அமைந்துள்ள கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வயது 45. இவருக்கு திருமணமாகி 17 வயதில் ஒரு மகனும், 14 வயது மகளும் உள்ளனர். 

இந்த விவசாயி வசித்து வரும் அதே பகுதியில் 47 வயது மிக்க திருமணமான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். முதலில் விவசாயியும் இந்த பெண்ணும் நட்பாக பழகி உள்ளனர். நாளிடைவில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் தவறான உறவில் இருந்து வந்துள்ளனர். இதனை பற்றி அறிந்து கொண்ட விவசாயின் மகன் மிகவும் கோபத்துடன் இருந்திருக்கிறான். இதனை அடுத்து அந்த சிறுவன் தன் நண்பன் ஒருவனை உடன் அழைத்துக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு சென்று தன் தந்தையுடன் தவறான உறவை கைவிடும்படி வற்புறுத்தி இருக்கிறான். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறி இருக்கிறது. ஆத்திரத்தில் அந்த சிறுவன் அந்த பெண்ணை அருகிலிருந்த உருட்டு கட்டையை வைத்து தலையில் அடித்து இருக்கிறான். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைப் பார்த்த அந்த சிறுவனும் அவனது நண்பனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.