17 வயதில் கர்ப்பம்! குழந்தையை ஸ்கேனில் பார்த்து அலறிய இளம் தாய்! பீதியை கிளப்பும் உருவம்!

விர்ஜினியாவில் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த 17 வயது சிறுமிக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி லைனா கேரிங்டன். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவர் கர்ப்பம் தரித்து இன்னும் சில தினங்களில் தாய் எனும் அந்தஸ்தை பெற இருந்தார். அதற்காக வயிற்றில் வளரும் குழந்தையை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

இந்நிலையில் வயிற்றில் வளரும் குழந்தையின் தன்மையை பரிசோதிக்க லைனா ஸ்கேன் செய்ய சென்றுள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றில் வளர்ந்து வருவது பெண் குழந்தை என தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தார். 

ஸ்கேன் இயந்திரத்தில் குழந்தையின் முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தபோது அது திடீரென கண்ணை உருட்டி திறந்து பார்த்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பார்ப்பதற்கு அசல் பேய்க் குழந்தை போலவே இருப்பதை பார்த்த லைனா அதிர்ச்சியில் உறைந்து போனார்.

பின்னர் அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டில் அனைவருடைய முகமும் அப்படி பேய் போலத்தான் தெரியும் பயப்படுவதற்கு தேவையில்லை. உங்கள் வயிற்றில் வளர்வது பேய் குழந்தையும் இல்லை என ஆறுதல் கூறினார். அதன் பின்னரே லைனாவுக்கு அச்சம் நீங்கி பின்னர் வீடு போய் சேர்ந்தார்.

குழந்தை உருவம் பொறித்த அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை சமூக வலைதளங்களில் பதிவிட்ட லைனா தன் வயிற்றில் வளரும் பேய்க் குழந்தைதைய மிகவும் ரசிப்பதாக தெரிவித்துள்ளார்.