பாலியல் வல்லுறவுக்கு மிரட்டிய இளைஞன்! மறுத்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்! பிறகு நேர்ந்த கொடூரம்!

பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு கூறிய, 17 வயது இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகல்பூரில் உள்ள அலிகாஞ்ச் பகுதியில் கங்கா விகார் காலனியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் தனது தாயுடன் வீட்டில் இருந்தபோது, அண்டை வீட்டில் வசிக்கும் பிரின்ஸ் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு அந்த இளம்பெண் மறுத்ததோடு, கூச்சலிட்டும் உள்ளார். இதையடுத்து, ஆத்திரம் தாங்காமல், அண்டை வீட்டுக்கார இளைஞர், அவர் மீது ஆசிட் வீசி தாக்கியுள்ளார். இதில், அந்த பெண் கடுமையாக காயமடைந்தார்.அவரை உடனடியாக, மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதுபற்றி தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.