17 வயதில் காதல் திருமணம்! முதலிரவு! இறந்து பிறந்த குழந்தை! சிறுமிக்கு காதலினால் நேர்ந்த விபரீதம்!

சென்னையில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட 17 வயது சிறுமியை, வியாசர்பாடியை சேர்ந்த  ஜோஸ்வா என்பவர் காதலிப்பதாகக் கூறி, பழகிவந்துள்ளார். இதன்போது, அந்த சிறுமி கருவுற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை ஜோஸ்வா திருமணம் செய்துகொண்டார். 

ஆனால், அடிக்கடி அந்த சிறுமியை அடித்து உதைத்து அவர் சித்ரவதை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதில், அவர் மனதளவில் பாதிப்பிற்கு ஆளானார்.

குழந்தை இறந்து பிறந்ததற்கு, ஜோஸ்வா செய்த சித்ரவதையே காரணம் எனக் கூறி, அவர் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக, ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.