குளிக்கும் போது அந்த ஆண்ட்டி வீடியோ எடுத்தாங்க! பிறகு லாட்ஜூக்கு கூட்டிட்டு போனாங்க! 17 வயது இளம் பெண் பகீர் வாக்குமூலம்!

குளிப்பதை வீடியோ எடுத்து அதை வெளியிடுவேன் என மிரட்டி 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.


கேரள மாநிலம் கொல்லம் குறிப்புழா பகுதியில் 17 வயது சிறுமி குளிப்பதை அவரது உறவினராக லினட் என்ற பெண் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை அந்த சிறுமியிடம் காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி தயவு செய்து இன்டர்நெட்டில் போடவேண்டாம். குடும்பத்துக்கே அவமானம் ஆகிவிடும் என்று கெஞ்சி அழுதுள்ளார். 

சிறுமி பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட உறவுக்கார பெண்ணான லினட் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். தனக்கு தெரிந்த பல பணக்கார நபர்களை வரவழைத்து அந்த சிறுமியை இரையாக்கி உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து விபச்சார தரகராக செயல்பட்டு வந்துள்ளார் லினட்.

சிறுமி வழக்கம்போல வேலைக்கு செல்வது போல லாட்ஜிக்கு சென்றுவிடுவார். அங்கு பல ஆண்களுக்கு இரையாகிவிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வந்துவிடுவார். இந்த சிறுமியை வைத்து லினட் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வேலைக்கு செல்வதாக சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. மகள் வராததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினார்கள். மறுநாள் காலை ஒரு பெண் சிறுமியை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார். சிறுமி திருவனந்தபுரம் பகுதியில் தவித்து கொண்டிருந்ததாக கூறி ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். மகளின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரியவே, அவருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்து தந்தனர்.

அப்போதுதான் அவர் திடுக்கிடும் விஷயங்களை சொல்லி உள்ளார். குளிக்கும்போது தன்னை வீடியோ எடுத்து மிரட்டியது மட்டுமின்றி தன்னை பாலியல் தொழிலில் உறவினர் பெண்ணான லினட் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு லாட்ஜிக்கு சென்றதாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும் அந்த சிறுமி திருவனந்தபுரம், கொல்லம், கொட்டியம் என நிறைய இடங்களில் லாட்ஜ்-களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுமி தந்த தகவலில் லினட், கருநாகப் பள்ளியில் லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப், ரினு, நசீம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.