பெற்ற மகளுடன் பாலியல் வல்லுறவு! கண்டுபிடித்த மாமனுடன் பங்கிட்டுக் கொண்ட கொடுமை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

17 வயதுச் சிறுமியை ஓராண்டில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் தந்தையையும் மாமனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


மங்களூரை அடுத்த பண்ட்வல் கிராமத்தைச்  சேர்ந்த சிறுமியும், அவரது தாயும் நோய்வாய்ப்பட்ட சிறுமியின் தாய் வழிப் பாட்டையை பார்க்க் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு அன்று இரவு அருகில் உள்ள சிறுமியின் தாய் மாமன் வீட்டுக்கும் சென்றனர்.

அங்கு சிறுமியை மாமன் பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை வெளியில் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிறுமி அதனை தனது தாயிடம் தெரிவித்து விட்டார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தததையடுத்து மாமனை போலீசார் கைது செய்தனர். 

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் தந்தையும் பல முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனை ஒருமுறை பார்த்துவிட்ட மாமனும் அதன் பிறகு சிறுமியை மிரட்ட அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து தந்தையையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.