மது அருந்திவிட்டு மகளுடன் சேர்ந்து தந்தை செய்த மோசமான செயல்! நொடியில் ஏற்பட்ட பயங்கரத்தால் ஏற்பட்ட விபரீதம்!

கனடாவில் குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.


கனடா நாட்டின் கால்கரியை சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது மகள் உட்பட 2 பேருக்கு ரிங்கேட் விளையாட்டில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்று பெற அவர்களை தனது காரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். மைக்கேல் வீட்டில் இருந்துபுறப்படும்போதே போதையில் இருந்ததாக தெரிகிறது.  

இவர்கள் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டு பின்னர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குக்குள்ளானது. இதில் கால்முறிவு ஏற்பட்ட மைக்கேலுக்கு செயற்கை உபகரணம் பொறுத்தப்பட்டுள்ளது. அவரது மகல் மேகன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த மற்றொரவர் கெல்சீ தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு பழைய நினைவுகளை மறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கார் அதிகபட்சம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிவித்தனர். பொதுமக்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொண்ட போலீசார் மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், மோசமாக வாகனம் ஓட்டியதாகவும் மைக்கேல் மீது வழக்குப் பதிந்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மைக்கேல் சிறைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.