7 வருடங்களாக வெறும் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் தான்! கண் பார்வையை இழந்த 17 வயது சிறுவன்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் கடந்த 7 வருடங்களாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் மற்றும் வெள்ளை ரொட்டி மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். தற்போது அந்த சிறுவன் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 17 வயதான சிறுவன் தனது 10 வயது முதல் பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் உடல் பருமன் மற்றும் உடல் சோர்வு நரம்பு மண்டல பாதிப்பு போன்ற வகையான நோய்கள் அச்சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் சிறுவனுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை குழந்தைக்கு அளிக்கும்படி பெற்றோர்களிடம் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அச்சிறுவன் மீண்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் அச்சிறுவனுக்கு கண்ணீர் நரம்பு மண்டலத்தில் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது அதனால் நிரந்தரமாக கண் பார்வைத் திறன் முற்றிலும் பறிபோயுள்ளது. இன்னிலையில் அச்சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.