படிக்கும் வயசுல காதல்! +1 மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம்! பெண் குழந்தைகள் பெற்றோரை பதற வைக்கும் சம்பவம்!

சுசீந்திரம் அருகே கட்டிட தொழிலாளியை காதலித்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அஜித். 22 வயதான இவர்  கட்டட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது அத்தை மகள் உறவு முறை பெண்ணான ஆனந்தி என்பவருடன் அஜித்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் லேட்டஸ்ட் மாடல் செல்போன், புதிய பைக், ஜீன்ஸ் என்று வலம் வந்த அஜித் உறவுப் பெண் ஆனந்திக்கு காதல் வலை வீசியுள்ளார். புரியாத வயதில் இனக்கவர்ச்சியில் அஜித் மீது ஆனந்திக்கு காதல் வந்துள்ளது. இதனை அடுத்து அவ்வப்போது வெளியே சென்று இருவரும் காதல் வளர்த்தள்ளனர்.

இந்த விவகாரம் ஆனந்தியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக ஆனந்தியை வீட்டில் அடைத்து கண்டித்துள்ளனர். 17 வயதில் காதல் எதற்கு என்று அவர்கள் கூறி அறிவுறை சொல்லியுள்ளனர். ஆனால் ஆனந்தி கேட்பதாக இல்லை.

இந்த நிலையில் ஆனந்தியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய அஜித் முடிவு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த ஆனந்தி வீட்டார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் விபரீத முடிவில் இறங்கினார்.

கை நிறைய அரளி விதைகளை எடுத்துக் கொண்டு நேராக ஆனந்திவீட்டுக்கு சென்றுள்ளார் அஜித். மேலும் அரளி விதைகளை ஆனந்தியிடம் கொடுத்துவிட்டு என்னுடன் வரவில்லை என்றால் நீயும் செத்துவிடு, நானும் செத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும் நேராக சுடுகாட்டுக்கு சென்ற அஜித் அரளி விதையை சாப்பிட்டு அங்கேயே செத்துள்ளார். இது பற்றிய தகவல்அறிந்த ஆனந்தியும் வீட்டில் அஜித் கொடுத்துச் சென்ற அரளி விதைகளை சாப்பிட்டுள்ளார்.

இதனால் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இறந்தனர். படிக்கும் வயதில் பருவ ஈர்ப்பில் பெற்றோரை பற்றி கவலைப்படாமல் காதல் என்ற பெயரில் ஆனந்தி உயிரிழந்தது பெற்றோரை மட்டும் அல்லாமல் பெண் பிள்ளைகளை பெற்ற அனைவரையும் அதிர வைத்துள்ளது.