மாறி மாறி பலாத்காரம் செய்த 3 பேர்! அந்த உறுப்பை கடித்து தப்பிய 17 வயது திருநங்கை! அதிர வைக்கும் சம்பவம்!

திருநங்கை பெண்ணொருவரை 3 ஆண்கள் சேர்ந்து கற்பழித்து இருக்கும் சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் 17 வயது திருநங்கையாவார். கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று ஆண்ட்வெர்ப் பகுதியில் உள்ள ஒரு இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அன்று தான் அவர் முதன்முதலில் முழுமையாக பெண்ணாக மாறினார். அந்த இரவு நிகழ்ச்சியில் நடனம் ஆடி கொண்டிருந்த போது, 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார்.

மேலும் அந்த ஆண் தன்னுடைய இரு நண்பர்களின் உதவியினால் திருநங்கையை டாக்சியில் ஏற்றி ஒரு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை வற்புறுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த  திருநங்கை சம்பந்தப்பட்ட ஆண்களில் ஒருவரது ஆணுறுப்பை கடித்து அங்கிருந்து தப்பித்துள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த இன்னல்களை ஒரு வழக்கறிஞரிடம் தெரிவித்து அந்த மூவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

பாதிக்கப்பட்ட திருநங்கையின் வழக்கறிஞர் கூறுகையில், "என் கட்சிக்காரன் ஒரு திருநங்கையாவார். அன்றுதான் முதல் முதலில் அவர் முழுமையாக பெண்ணாக மாறினார். இந்நிலையில் அவரை குற்றம் சாட்டப்பட்ட 3 ஆண்கள் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளார். 3 ஆண்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கி இழப்பீடாக என் கட்சிக்காரருக்கு 70,000 பவுண்டுகள் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அந்த 3 ஆண்களும் தொடக்கத்தில் தாங்கள் இரவு பார்ட்டிக்கு செல்லவில்லை என்று மறுத்தனர். பின்னர் எடுக்கப்பட்ட மரபணு சோதனையில் அவர்கள் தான் சிறந்தவை பலாத்காரம் செய்துள்ளனர் என்பது நிரூபணமானது. இந்த வழக்கின் தீர்ப்பானது 11-ஆம் தேதியன்று வெளியாகயுள்ளது. இந்த சம்பவமானது பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.