15 வயது சிறுவனுடன் 17 வயது சிறுமிக்கு காதல்! எல்லை மீறியதால் கர்ப்பமான பரிதாபம்! சென்னை பரபரப்பு!

17 வயது சிறுமியை 15 வயது மைனர் பையன் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஆவடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரில் ஆவடி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு வயது 17.   

ஆவடியை அடுத்த பட்டாபிராம் என்னும் இடத்தை சேர்ந்தவர் விஜய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விஜயின் வயது 15. கடந்த ஒரு வருடமாக குமாரியும்  விஜயும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார் விஜய். இதனால் 17 வயதே ஆன குமாரி 15 வயதே ஆன விஜயால் கர்ப்பம் அடைந்தார்.

குமாரி கர்ப்பம் அடைந்ததை அறிந்த விஜய் அவரை புறக்கணிக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரி தன் குடும்பத்தினருடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். தற்போது குமாரி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விஜய் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவமானது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.