மாயமான 17 வயது பெண்ணுடன் 19 வயது பெண்! தேடிப் போன போலீஸ் கண்ட காட்சி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

17 வயது இளம்பெண்ணுடன் 19 வயது இளம்பெண் ஓடிப்போன சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் பங்கலோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். காவல் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் பெற்றோர் புகாரளித்திருந்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன பெண்ணை வலைவீசி தேடி வந்தனர். 

2 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்தனர். அவருடன் 19 வயது இளம்பெண் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் பெற்றோர் 19 வயது இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் வற்புறுத்தினர்.

உடனடியாக காணாமல் போன பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதாவது 2 ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து தப்பியோட எண்ணினார்கள். அதன்படி ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டு ஓடியுள்ளனர். 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் அவரை மீட்டு வந்தனர். 

காணாமல் போன பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தைக் கூட்டினர். அங்கு 19 வயது இளம்பெண் தங்கள் மகளை கடத்தி சென்றதாக புகாரளித்தனர். பஞ்சாயத்து தலைவர்கள் 19 வயது இளம்பெண்ணுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இருவரும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவமானது மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.