சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர்! காவல் நிலையத்தில் நடந்த அதிரடி!

17 வயது சிறுமியை அதிமுக பிரமுகர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவமானது சிதம்பரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் படைவீட்டு மாரியம்மன் கோவில் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிகளில் அதிமுக நிர்வாகியாக திருமுருகன் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியொருவரை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் அந்த சிறுமி திடீரென்று கருவுற்றாள். இந்த சம்பவம் அறிந்த திருமுருகன் சற்று பதறினார். பின்னர் அந்த சிறுமியை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.

தன்னுடைய வீட்டிற்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த அனைத்தையும் வந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் சிறுமியை அழைத்து கொண்டு சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி திருமுருகனால் தனக்கு நேர்ந்த இன்னல்களை கதறி அழுது தெரிவித்துள்ளார். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிமுக பிரமுகரான திருமுருகனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.