வீட்டின் வாசலிலிருந்த கிணற்றில் குதித்து 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுவதும் படிப்பு! அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியேறிய இளம் பெண்! அவரை தேடிச் சென்ற தாய் கண்ட காட்சி!
ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயதான அஞ்சனா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்புக்கான கிரேடு தேர்வு நடைபெறவிருந்தது. இதற்காக ஞாயிறு முழுவதும் அஞ்சனா படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை 5 மணியளவில் வீட்டை விட்டு அஞ்சனா வெளியே சென்றுள்ளார். நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால் காஞ்சனாவின் தாயாரும் சகோதரியும் பதற்றம் அடைந்தனர். அஞ்சனாவின் தங்கை துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு வாசலில் இருந்த கிணற்றில் அஞ்சனா மிதந்து கொண்டிருந்ததை கண்ட தாய் மற்றும் சகோதரி கதறி துடித்தனர். உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அஞ்சனாவின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், "அஞ்சனா கடந்த 5 நாட்களாகவே யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்வு பயத்தினால் அவர் மிகவும் பேரதிர்ச்சி அடைந்தார் அவருடைய பெற்றோர் அவரிடம் நிறைய முறை விசாரித்தும், அஞ்சனா சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
தேர்வு பயம் அதிகரித்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்" என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.